வெள்ளக்கோவிலில் நெறிமுறைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி

வெள்ளக்கோவிலில் நெறிமுறைகளுக்கு எதிராக கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

வெள்ளக்கோவிலில் நெறிமுறைகளுக்கு எதிராக கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
அதிக சத்தத்தால் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை மீறி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்கள், பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் படிக்கும் மாணவ, மாணவிகள், வயதானவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒலிபெருக்கிகளை பயன்படுத்த விரும்புபவர்கள் காவல் துறையினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அப்போது, கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதியளித்து எழுதிக் கொடுத்த பின்னரும் விதிமீறல் நடக்கிறது.
தற்போது வெள்ளக்கோவில் தாராபுரம் சாலையில் மின்கம்பங்களில் பல கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் நிகழ்ச்சிக்காக கட்டப்பட்டுள்ளன. இதுபோன்று, பல இடங்களில் தொடரும் விதிமீறல்களை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com