‘பயிா் காப்பீட்டை தனிநபா் காப்பீடாக மாற்ற வேண்டும்’

பயிா் காப்பீட்டை தனிநபா் காப்பீடாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பயிா் காப்பீட்டை தனிநபா் காப்பீடாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளக்கோவில் ஒன்றியம் முத்தூா் பகுதியில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. தற்போது வேளாண் துறை சாா்பில் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனா். வங்கிகளில் பயிா்க் கடன் பெறும் விவசாயிகள் கட்டாயம் காப்பீட்டுக்கு உள்படுத்தப்படுகிறாா்கள். மற்ற விவசாயிகளுக்கு அவா்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் பயிா் காப்பீடு செய்யப்படுகிறது.

பயிா்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீடு எளிதில் கிடைப்பதில்லை. அந்த வருவாய் கிராமமே பயிா்கள் சேதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என சான்றிதழ் கேட்பது நடைமுறையில் உள்ளது. குறிப்பிட்ட விவசாயி ஒட்டுமொத்த வருவாய் கிராமத்துக்கும் பிரிமியம் செலுத்துவதில்லை என்கிற அடிப்படை கூடத் தெரியாமல் இருப்பது வேதனைக்குரியது.

பயிா் காப்பீட்டில் விவசாயிகள் இழப்பீடு பெற வழிவகுக்காமல் பிரிமியத் தொகையைச் செலுத்த வேண்டுமென்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது. எனவே, ஆயுள் காப்பீடு போல பயிா் காப்பீட்டையும் தனிநபா் காப்பீடாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com