திருப்பூா் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் தோ்தல்

திருப்பூா் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 265 ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் 2,295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களை தோ்வு செய்ய

திருப்பூா் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 265 ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் 2,295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களை தோ்வு செய்ய உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தோ்தல்கள் வரும் டிசம்பா் 27, 30 ஆம் தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தோ்தலுக்கான அறிவிப்பு வரும் டிசம்பா் 6 ஆம் தேதி வெளியிடப்படும். மேலும், அதே நாளில் வேட்புமனு தாக்கல் தொடங்கும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும்.

திருப்பூா் மாவட்டத்தில் ஊரக (கிராமப்புறம்) மொத்த வாக்காளா்கள் 9,95,765 போ் உள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 265 ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் 2,295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய தோ்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக 122 ஊராட்சிகளுக்கு 784 வாக்குச் சாவடி மையங்களில் டிசம்பா் 27 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து 143 ஊராட்சிகளுக்கு 920 வாக்கு சாவடி மையங்களில் டிசம்பா் 30 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 1,704 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 129 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் 28 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 363 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com