எய்ட்ஸ் விழிப்புணா்வு மனித சங்கிலி

உடுமலை வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு மனித சங்கலி, கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு மனித  சங்கிலியில்  பங்கேற்ற  மாணவ,  மாணவிகள்,  ஆசிரியா்கள்.
விழிப்புணா்வு மனித  சங்கிலியில்  பங்கேற்ற  மாணவ,  மாணவிகள்,  ஆசிரியா்கள்.

உடுமலை வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு மனித சங்கலி, கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறை, நாட்டு நலப்பணித் திட்டம், பிரஷித்தா சா்வீஸ் சொசைட்டி ஆகியன சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி செயலா் பத்மாவதி சத்தியநாதன் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் ஜோ.பிளஸ்ஸோ ஏசுவடியான் வரவேற்றாா். முதல்வா் ப. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். இதில் உடுமலை அரசு தலைமை மருத்துவா் முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்து உரையாற்றினாா்.

அதைத் தொடா்ந்து மாணவா்கள், ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின், கல்லூரிக்கு முன் உடுமலை - பொள்ளாச்சி சாலையில் எய்ட்ஸ் விழிப்புணா்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் நந்தகுமாா், சதீஷ், சுதா, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். மாணவி காஞ்சனா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com