சிறு, குறு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெற விண்ணப்பிக்கலாம்

சிறு, குறு விவசாயிகள் மத்திய அரசின் கிஸான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிறு, குறு விவசாயிகள் மத்திய அரசின் கிஸான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூர்  மாவட்டத்தில் பிரதமரின் சிறு, குறு விவசாயிகளுக்கான கிஸான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ. 6ஆயிரம் 3 தவணைகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சாகுபடிசெய்யத்தக்க 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பங்குபெறலாம்.
இதில் அரசியலமைப்புப் பதவி வகித்தவர்கள், தற்போது வகிப்பவர்கள்,  மக்கள் பிரதிநிதிகள்,  மத்திய, மாநிலஅரசு நிறுவனங்களில் பணிபுரிவோர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், உள்ளாட்சிஅமைப்புகளின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள், மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள்(தொகுதி டி ஊழியர்களைத் தவிர). வருமான வரி செலுத்துபவர்கள், மருத்துவர்கள்,பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், பட்டய கணக்காளர்கள் மற்றும்  கட்டடக் கலைநிபுணர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறைஅமைப்புகளில் பதிவுசெய்து துறைத் தொடர்பானதொழில்களை மேற்கொண்டு இருப்பவர்கள் இவர்களைத் தவிர திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்குள் பதிவு செய்யலாம்.
மேலும், இவர்கள் தங்களது நிலத்தின் சிட்டா, நில உரிமையாளரின் ஆதார் அட்டை,  வங்கிக் கணக்கு புத்தகம், குடும்பஅட்டை,  புகைப்படம் (பாஸ்போர்ட் அளவிலானது) உள்ளிட்டவற்றுடன் விவசாயிகள் அனைவரும் பதிவு செய்து பயன் பெறலாம். 
வட்டாட்சியர்கள், வேளாண்மை உதவி  இயக்குநர்கள் தொடர்புக்கு
திருப்பூர் வடக்கு.....9445000574    
அவினாசி..................9843774567
திருப்பூர் தெற்கு.....9865478984    
தாராபுரம்.................9442434863
அவிநாசி....................9445000575    
குடிமங்கலம்..............8610920270
பல்லடம்....................9445000573   
காங்கயம்....................9965588226
ஊத்துக்குளி...............9443565989    
குண்டடம்.................8072294587
தாராபுரம்..................9445000565    
மடத்துகுளம்.............8344106750
காங்கயம்....................9445000566    
மூலனூர்.....................9486412102
உடுமலை ...................9445000578    
பல்லடம்....................9442844942
மடத்துக்குளம்....9597910477    
பொங்கலூர்..............9965513265
உடுமலை...................9965148916 
ஊத்துக்குளி...............9344911511
வெள்ளகோவில் ........9443946072 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com