நிஃப்ட்-டீ கல்லூரியில் வணிகவியல் கண்காட்சி

திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரியில் வணிகவியல் துறைக் கண்காட்சியும், பாரம்பரிய உணவுத் திருவிழாவும் புதன்கிழமை நடைபெற்றன.

திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரியில் வணிகவியல் துறைக் கண்காட்சியும், பாரம்பரிய உணவுத் திருவிழாவும் புதன்கிழமை நடைபெற்றன.
  திருப்பூர், முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சி (காமர்ஸ் எக்ஸ்ஃபோ) மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவுக்கு கல்லூரி முதல்வர்  கே.பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூர் 2 ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: 
 உலகளாவிய பொருளாதாரமயம், தாராளமயமாக்கல், தனியார்மயம் என்றான  பிறகு ஒவ்வொருவருக்கும் தங்கள் தயாரிப்புகளை, திறமைகளை சந்தைப்படுத்துதல் என்பது சவாலாக உள்ளது. வணிகச் சந்தையில் இறங்குவோர் தயங்காமல் தரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். லாபம்தான் நமது நோக்கமாக இருந்தாலும் அதிலும் ஒரு நேர்மையும், விற்பனை பண்பாடும் இருக்க வேண்டும்.  உணவுப் பொருள்கள் என்றாலும் அதில் மனித உயிர்களைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் இறங்குபவர்கள் சமூக  நோக்கத்துடன் இருப்பது மிகவும் அவசியம் என்றார்.   கண்காட்சியில் நெகிழி இல்லா திருப்பூர், ஸ்மார்ட் சிட்டி, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்டப் இந்தியா, தூய்மை பாரதம், வங்கி நடைமுறை செயல் விளக்கம், தொழில்முனைவோர் வழிகாட்டு நெறிமுறைகள், மத்திய அரசின் தொழில் மேம்பாட்டு கொள்கைகள் குறித்து விளக்கப்பட்டன.
  கல்லூரி துணை முதல்வர் ஏ.தயாளராஜன், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள்  கருப்புசாமி, யசோதா, புவனேஸ்வரி,  பாலமுத்துக்குமார். ராஜசேகரன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com