பில்டர்ஸ் பொறியியல் கல்லூரிக்கு விருது
By DIN | Published On : 14th February 2019 07:44 AM | Last Updated : 14th February 2019 07:44 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி சிறந்த கல்லூரிக்கான விருதினைப் பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள சுப்ரீம் சோல் கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வருடம்தோறும் எஸ்.எஸ்.இன்ஃபோ டிவி என்னும் கல்விச் சேவை விருது சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மாவட்டத்தில் சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருதை பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள உமையாள் ஆச்சி நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர், தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். சுப்ரீம் சோல் கம்பைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.கோகுல் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். இதில், பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளருமான பி.பாலசிவகுமார் சிறந்த கல்லூரிக்கான விருதை பெற்றுக் கொண்டார். இத்தகவலை பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.