திருப்பூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்
By DIN | Published On : 28th February 2019 08:21 AM | Last Updated : 28th February 2019 08:21 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இதில்,
தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் வரை கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரிசெய்து கொள்ளலாம்.
கூடுதல் கல்வி பதிவு செய்தல், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் செய்தல் ஆகியவற்றையும் அதே நாளில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.