ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்கக் கோரிக்கை

வெள்ளகோவில் பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள 1623 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளகோவில் பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள 1623 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் ச.கருப்பையா காங்கயம் வட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளகோவில் பகுதியில் உத்தமபாளையம் காசிவிஸ்வநாதர் கோயில், மயில்ரங்கம் வைத்தியநாதர் கோயில், வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோயில், கண்ணபுரத்தில் உள்ள செல்வவிநாயகர்-மாரியம்மன்-விக்ரம நாராயணப் பெருமாள் கோயில்கள், வள்ளியரச்சல் மாத்தீஸ்வரன் கோயில், முத்தூர் சோழீஸ்வரர் கோயில், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரன் கோயில் ஆகிய 7 கோயில்களுக்கு சொந்தமான 1623 ஏக்கர் நிலங்கள் இன்றுவரை தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அவர்களின் பயன்பாட்டில் உள்ளன.
இதுகுறித்து பல முறை முறையிட்டும் இந்த கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்படவில்லை. 
எனவே, காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பதற்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com