வளர்ச்சிப் பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

வளர்ச்சித் திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


வளர்ச்சித் திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் மாவட்ட அளவிலான அனைத்துத் துறைஅதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: 
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். 
மேலும்  பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்டவைகள் எந்தவித தங்கு தடையின்றி கிடைத்திட அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றார். 
இதையடுத்து திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். 
இதில் மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார்,  மாவட்ட வன அலுவலர் பி.கே.திலீப், உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியம், உடுமலை கோட்டாட்சியர் சி.இந்திரவள்ளி, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், மாவட்ட ஆவின் நிறுவன தலைவர் வழக்குரைஞர் கே.மனோகரன் மற்றும் துறை அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து உடுமலையை அடுத்துள்ள சோமவாரப்பட்டியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி நிலையத்தை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து, பூங்காவை முறையாக பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com