முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை தினம்
By DIN | Published On : 31st July 2019 08:17 AM | Last Updated : 31st July 2019 08:17 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பிரசாத் தாமரைக்கண்ணன், நதீனா, மார்கினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்காக நடத்தப்பட்ட ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மனவளக் கல்வி, உடல் ஆரோக்கியம், சத்தான உணவு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அப்போது, அரசின் அம்மா தாய் சேய் நலப் பெட்டகம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவர் சுடர்கொடி, மருந்தாளுநர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.