குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.

அவிநாசியில்...
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
அவிநாசி விழுதுகள் அமைப்புகள் சார்பில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சாந்தி லட்சுமி துவக்கி வைத்தார். மேலாளர் தவமணி முன்னிலை வகித்தார். இதையடுத்து, 6 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் கட்டாயம் கல்வி பயிலச் செய்வது,  எட்டாம் வகுப்பில் இடைநின்றவர்களைக் கணக்கெடுத்து மீண்டும் கல்வி பயலச் செய்வது, பெற்றோர் இல்லாக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவது, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்து வாகனம் மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com