"பின்னலாடை துறை வளர்ச்சிக்கு மத்திய ஜவுளித் துறை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு'

பின்னலாடைத் துறையில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கவும், திருப்பூர் உள்ளிட்ட 4  தொழில் நகரங்களில் பின்னலாடை மையம் அமைக்கவும், மத்திய அரசு ரூ. 50 கோடி வழங்குவதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர்

பின்னலாடைத் துறையில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கவும், திருப்பூர் உள்ளிட்ட 4  தொழில் நகரங்களில் பின்னலாடை மையம் அமைக்கவும், மத்திய அரசு ரூ. 50 கோடி வழங்குவதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏஇபிசி தலைவர் மாகு, துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் கூறியதாவது:
தில்லியில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் பின்னலாடைத் தொழில் துறையினருடலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பின்னலாடைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிதியில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு பின்னலாடை உற்பத்திப் பயிற்சி அளிக்கப்படும். பின்னலாடை சார்ந்த நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்கவும் ஆவன செய்யப்படும். திருப்பூர், கொல்கத்தா, லூதியானா, சூரத் ஆகிய இடங்களில் பின்னலாடை மையம் துவங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com