அவிநாசியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 14th June 2019 09:43 AM | Last Updated : 14th June 2019 09:43 AM | அ+அ அ- |

அவிநாசியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலையோர ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி பிரிவில் இருந்து ஆட்டையாம்பாளையம் பகுதி வரை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் உணவகங்கள், மளிகைக் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் சாலையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை கால அவகாசத்துடன் முன்னெச்சரிக்கை அறிக்கை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவித்தபடி, அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பழங்கரை பிரிவு அருகே உணவுக் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அடுத்த 3 நாள்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடரும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.