கால்நடைப் பண்ணையாளர்களுக்கு பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைப் பண்ணையாளர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைப் பண்ணையாளர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது.
இதுகுறித்து திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைப் பண்ணையாளர்களுக்கு நபார்டு வங்கி நிதியுதவியுடன் கால்நடை பயிற்சி மையத்தில் 3 நாள்  பயிற்சி முகாம் புதன்கிழமை  தொடங்குகிறது. இந்தப் பயிற்சியானது வரும் வெள்ளிக்கிழமை வரையில் நடைபெற உள்ளது. 
இதில், கால்நடை பண்ணைக் கழிவின் வகைகள், உரமாக்கும் முறைகள், மண்புழு உரம் தயாரித்தல், மறுசுழற்சி மூலமாக கந்தக உரமாக்குதல், பண்ணைக் கழிவுகள் மூலமாக வருமானம் ஈட்டுதல், பண்ணைக் கழிவுகளை சுற்றுப்புறத்துக்குத் தகுந்தவாறு உரமாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com