100 நாள் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்திப் போராட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் 100 நாள் தொழிலாளர்களுக்கு எல்லா நாள்களிலும் வேலை வழங்க வலியுறுத்து

திருப்பூர் மாவட்டத்தில் 100 நாள் தொழிலாளர்களுக்கு எல்லா நாள்களிலும் வேலை வழங்க வலியுறுத்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க நிர்வாகிகள் ஆர்.மணியன், கே.பிரகாஷ், வி.பி.பழனிசாமி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். 
இதில்,  சட்டக்கூலி ரூ.229ஐ குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும், சுழற்சி முறையில் வேலை கொடுப்பதை தவிர்த்து அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். 
கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழகத்தை  அறிவித்து நிவாரணப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் துவங்க வேண்டும், அனைத்து ஊராட்சிக் குடியிருப்புப் பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 100 நாள் வேலை நாட்களை 150 நாள்களாகவும், சட்டக்கூலியை ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 
அதே போல், பல்லடம், மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட 14 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். 
அவிநாசி, உடுமலையில்...
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றியத் தலைவர் மல்லப்பன் தலைமை வகித்தார். இதில், சங்க நிர்வாகிகள் பழனிசாமி, குருநாதன், சண்முகம், முருகேசன், குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  உடுமலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவில் ஆணையாளரிடம் அனைவரும் மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com