தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 04th March 2019 07:59 AM | Last Updated : 04th March 2019 07:59 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தற்போது 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மார்ச் மாதத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகளும் துவங்குகின்றன.
இந்தத் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் நல்ல உடல், மன ஆரோக்கியத்துடன் பங்கேற்று நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டி, ஐயப்ப சுவாமி கோயிலில் ஹயக்ரீவர் சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அப்போது மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், எழுது பொருள்கள் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன.
இதில் நூற்றுக்கணக்கான அரசு, தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்கள் பங்கேற்றனர்.