கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் 

திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் கல்வி வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியினைப் பயன்படுத்தி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை நன்கு படித்த தொழிலாளர்களின் குழந்தைகள் வட்டத்துக்கு ஒருவர் வீதம் 365 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
இவர்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் கல்வி வழங்கவும், அதேபோல 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த குழந்தைகளுக்கு 11, 12 ஆம் வகுப்புகளில் தனியார் பள்ளிகளில் மூலமாக கல்வி வழங்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் கல்வி அளித்தல் தொடர்பாக தொழிலாளர் நல வாரியங்களின் மாவட்ட கண்காணிப்புக் குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தொடக்க கல்வி துறை உதவியுடன் தனித்தேர்வு நடத்தப்பட உள்ளது. 
இதில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர் வட்டத்துக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்படுவார்கள். அதே போல், 11, 12 ஆம் வகுப்புகளில் கல்வி அளித்தல் தொடர்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் மாவட்டக் கண்காணிப்புக் குழுவின் மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். 
இதில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் 10 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணம் ரூ.15 ஆயிரம், பராமரிப்புக் கட்டணம் ரூ.5 ஆயிரம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட உள்ளது. எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம், 190, காமராசர் நகர், முதல் வீதி, மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில், பி.என்.சாலை, திருப்பூர்-641602 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com