மாணவர்களுக்கு இலவச கையெழுத்துப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 06th May 2019 02:58 AM | Last Updated : 06th May 2019 02:58 AM | அ+அ அ- |

உடுமலை உழவர் சந்தை எதிர்புறம் உள்ள கிளை நூலகம் (எண்-2) சார்பில் மாணவ, மாணவிகளுக்கான இலவச கையெழுத்துப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதில், நூலக வாசகர் வட்டத் தலைவர் இ.இளமுருகு முகாமைத் துவக்கி வைத்தார். நூலகர் வீ.கணேசன் முன்னிலை வகித்தார். கையெழுத்துப் பயிற்சியாளர் ராமதாஸ் ஆங்கிலம், தமிழ் எழுத்துகளை எவ்வாறு எழுத வேண்டும் என பயிற்சி அளித்தார்.
கோடைகால விடுமுறையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்தப் பயிற்சி முகாம் நடைபெறும். நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி, செல்வராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.