அமெரிக்கா ஸ்டைல் மேக்ஸ் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 16th May 2019 08:37 AM | Last Updated : 16th May 2019 08:37 AM | அ+அ அ- |

அமெரிக்காவில் நடைபெற உள்ள ஸ்டைல் மேக்ஸ் ஆயத்த ஆடை கண்காட்சியில் பங்கேற்க பின்னலாடைத் துறையினருக்கு திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஸ்டைல் மேக்ஸ் ஆயத்த ஆடை கண்காட்சி மே 19 முதல் 21 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், நமது நாட்டு ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இக்கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், பல்லடம் சாலை, ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் இயங்கி வரும் தொழில் பாதுகாப்புக் குழுவை அணுகி மே 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் நிறுவனத்தினர், உத்யோக் ஆதார், கடைசி மூன்று ஆண்டுக்கான நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை, வருமான வரி செலுத்திய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.