விலை வீழ்ச்சி: வெண்பட்டு விவசாயிகள் கவலை

வெண்பட்டு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.

வெண்பட்டு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெண்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். வெண்பட்டுக் கூடு உற்பத்தியில் மாநிலத்திலேயே இப் பகுதி முதலிடத்தை வகித்து வருகிறது. ஆண்டு முழுவதும் பட்டுப் புழு வளர்ப்புக்கு ஏற்ற மிதமான தட்ப வெப்பம் நிலவி வருவதால் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெண்பட்டுக் கூடுகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.
 கடந்த சில ஆண்டுகளாக உடுமலை வட்டத்தில் நிலவி வந்த வறட்சியின் காரணமாக பட்டுப் புழுக்களுக்கு உணவாக போடப்படும் மல்பெரி செடிகளின் சாகுபடி பரப்பளவு படிப்படியாக குறைந்தது. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த மல்பெரி சாகுபடி 500 ஏக்கர்களாக சுருங்கியது. இருப்பினும் தண்ணீரை விலைக்கு வாங்கியும், ஆழ்துளை கிணறுகள் மூலமு ம் மல்பெரி செடிகளை விவசாயிகள் காப்பாற்றினர். 
 இருப்பினும் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி, மாற்றுத் தொழிலை நாடும் நிலை ஏற்பட்டது. இதனால் வெண் பட்டுக் கூடுகள் உற்பத்தி கணிசமாக குறைந்தது. இந்நிலையில் வெண்பட்டுக் கூடுகளின் விலை திடீரென சரிந்தது. ஒரு கிலோ ரூ.600-க்கு விற்று வந்த பட்டுக் கூடுகளின் விலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து தற்போது ரூ.300 முதல் 350 வரை விலை போகிறது. இதனால் விவசாயிகள் கடும் இன்னுலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து சின்னவீரம்பட்டி விவசாயி ராஜேந்திரன் கூறியது: 
கடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியும், விவசாயிகளுக்குத் தேவையான நவீன கருவிகளை வழங்கி, கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வந்ததால் விவசாயிகள் வெண்பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டினர். இடையில் சில ஆண்டுகள் வறட்சியில் சிக்கி அதில் இருந்து மீண்டு தற்போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் வெண்பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 
 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நல்ல விலை கிடைத்தது. தற்போது கிலோ ரூ.300 முதல் 350 வரையே கிடைக்கிறது. இந்த விலை உற்பத்திக்கே கட்டுபடியாகாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com