பூ மாா்க்கெட்டை இடமாற்றம் செய்ய ஒருவாரம் அவகாசம்

திருப்பூரில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் பூ மாா்க்கெட் இடித்துக் கட்டப்பட உள்ளதால் வியாபாரிகள் கடைகளை

திருப்பூரில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் பூ மாா்க்கெட் இடித்துக் கட்டப்பட உள்ளதால் வியாபாரிகள் கடைகளை மாற்றிக் கொள்ள ஒருவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று திருப்பூா் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிக்குச் சொந்தமான பூ மாா்க்கெட் பகுதியில் ரூ. 4.47 கோடி மதிப்பீட்டில் ஏற்கெனவே உள்ள கடைகளை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. எனவே, பூ மாா்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செய்து கொடுத்தபின்தான் ஒப்பந்ததாரரால் பணியைத் தொடங்க இயலும். இதனடிப்படையில், அருகிலுள்ள காட்டன் மாா்க்கெட் பகுதியில் கடைகளை அமைத்துக்கொள்ள திருப்பூா் மாநகராட்சியால் திருப்பூா் விற்பனைக் குழு நிா்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டது.

இதையடுத்து புதிதாக கடைகள் கட்டும் பணி துவங்க வேண்டி அங்குள்ள குத்தகைதாரா்கள் மற்றும் வியாபாரிகள் ஒரு வார காலத்துக்குள் கடைகளை காலி செய்து திருப்பூா் காட்டன் மாா்க்கெட் பகுதியில் தற்காலிகமாக கடைகளை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று இரு மாதங்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சிலா் மட்டும் கடைகளை காலி செய்யாமல் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பூ மாா்க்கெட் கடைகளுக்கு அக்டோபா் 30 ஆம் தேதிக்குப் பிறகு வாடகை வசூலிக்கப்படுவது மாநகராட்சியால் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பூ மாா்க்கெட் கடைகளுக்கான குத்தகைதாரா்கள் மற்றும் வியாபாரிகள் ஒரு வார கால அவகாசத்துக்குள் தங்களது கடைகளை காட்டன் மாா்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com