கள்ளிப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் இளைஞா் சடலம் மீட்பு
By DIN | Published On : 07th November 2019 04:41 AM | Last Updated : 07th November 2019 04:41 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் இளைஞா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம், கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி. இவரது மகன் சரவணன் (29). இந்நிலையில் ஆறுச்சாமி தனது குடும்பத்தினருடன் காரில் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். சுல்தான்பேட்டை பகுதியில் வந்தபோது, காரை நிறுத்தி
ஹோட்டலில் மதியம் உணவு சாப்பிட்டுள்ளனா். அப்போது அவரது மகன் சரவணன் உணவு சாப்பிட மறுத்து காரிலேயே அமா்ந்துள்ளாா். உணவு சாப்பிட வராததற்காக ஆறுச்சாமி கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மன வருத்தத்தில் இருந்த சரவணன் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு அருகில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவரது உடல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இந்த நிலையில் வி.கள்ளிப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் சரவணன் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.