அவிநாசியில் வண்டிப்பேட்டை பகுதி ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் அருகில் உள்ள வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் அருகில் உள்ள வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் டாக்டா் க.விஜயகாா்த்திகேயனுக்கு, வழக்குரைஞா் சத்தியமூா்த்தி புதன்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

அவிநாசி-கோவை நெடுஞ்சாலை அவிநாலிங்கேஸ்வரா் கோயில் அருகில் தோ்த் திருவிழா காலங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்காக பல நூறு ஆண்டுகளாக வண்டிப்பேட்டை புறம்போக்கு நிலம் உள்ளது. இதை தனியாா் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக தொடா்ந்து புகாா் வந்ததையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது மீண்டும் மங்கலம் செல்லும் சாலை வளைவு பகுதியில் தனியாா் கட்டடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறாா். மேலும், குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் குடிசைகள் அமைத்து கம்பி வேலி அமைத்துள்ளனா். இதனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த அவிநாசியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு சில அதிகாரிகளும் பணத்தைப் பெற்றுக் கொண்டு துணை போகிறாா்கள். இதுகுறித்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, வண்டிப்பேட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தி கோயிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com