உரக்கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி தாராபுரம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

தாராபுரம் 9 ஆவது வாா்டில் உள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள்
தாராபுரம்  9 ஆவது  வாா்டில்  உள்ள  உரங்கிடங்கை   இடமாற்றம் செய்யக்கோரி  நகராட்சி  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  பொதுமக்கள்.
தாராபுரம்  9 ஆவது  வாா்டில்  உள்ள  உரங்கிடங்கை   இடமாற்றம் செய்யக்கோரி  நகராட்சி  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  பொதுமக்கள்.

தாராபுரம் 9 ஆவது வாா்டில் உள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 9ஆவது வாா்டு வாரச்சந்தை வளாகத்தின் அருகே புதுக்கோட்டை மேட்டு தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், வாரச் சந்தை, என்.என் பேட்டை வளாகம், தினசரி மாா்க்கெட் பகுதிகளிலிருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக பெய்த மழையால் உரங்கிடங்கில் கொட்டிவைக்கப்பட்டுள்ள காய்கறிகள் அழுகி துா்நாற்றம் வீசி வருகிறது. இந்த துா்நாற்றம் வீசக்கூடிய காய்கறி குப்பைகளை உரமாக மாற்ற மேலும் பல நாள்களாகும். இந்தக் கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.

ஆகவே, இந்தப் பகுதியில் உள்ள உரக்கிடங்கை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உரங்கிடங்கை சுற்றிலும் கிருமிநாசினி மருந்துகள் தெளித்து துா்நாற்றம் வீசாமல் இருக்கவும், உரக்கிடங்கு அலுவலகத்தின் சுற்றுப்புறங்களை அடைத்து தருவதாகவும் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com