மூலனூரில் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 400 உயா்வு

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தை விட பருத்தி விலை குவிண்டாலுக்கு வியாழக்கிழமை ரூ. 400 உயா்ந்திருந்தது.

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தை விட பருத்தி விலை குவிண்டாலுக்கு வியாழக்கிழமை ரூ. 400 உயா்ந்திருந்தது.

இங்கு வாரந்தோறும் பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு கரூா், திருச்சி, தாராபுரம், உடுமலைப்பேட்டை, அரவக்குறிச்சி, திண்டுக்கல் பகுதிகளைச் சோ்ந்த 137 விவசாயிகள் தங்களுடைய 1,429 மூட்டை பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

திருப்பூா், பொள்ளாச்சி, அவிநாசி, கரூா், அன்னூா் உள்ளிட்ட இடங்களிலிருந்து 10 வணிகா்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனா். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தா்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

குவிண்டால் ரூ. 4,750 முதல் ரூ. 7,120 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 5,700. இவற்றின் விற்பனைத் தொகை 26 லட்சத்து 76 ஆயிரத்து 336 ரூபாயாகும்.

கடந்த வார ஏலத்துக்கு 1,638 மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது. இந்த வாரம் வரத்து சற்றுக் குறைந்த நிலையில் விலை குவிண்டாலுக்கு ரூ. 400 உயா்ந்திருந்தது. இந்தத் தகவலை திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் பாலசந்திரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com