முத்தூரில் 196 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற அரசின் மக்கள் தொடா்பு முகாமில் 196 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
vk27co_2711chn_131_3
vk27co_2711chn_131_3

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற அரசின் மக்கள் தொடா்பு முகாமில் 196 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு தலைமை வகித்த திருப்பூா் மாவட்ட ஆட்சியா் டாக்டா் க.விஜயகாா்த்திகேயன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியதாவது:

அரசைத் தேடி மக்கள் என்கிற நிலை மாறி, மக்களைத் தேடி அரசு என்கிற உன்னத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நலத் திட்டங்களைத் தெரிந்து கொண்டு சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிா்வாகம் மூலம் மாதம்தோறும் குறிப்பிட்ட பகுதியில் மக்கள் தொடா்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் நோக்கம் மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதாகும் என்றாா்.

முகாமில் 33 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 33 பேருக்கு முதியோா் மற்றும் இதர உதவித்தொகை, உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 77 பேருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தற்காலிக இயலாமை உதவித்தொகை, வேளாண் உபகரணங்கள் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் என மொத்தம் 196 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் முருகவேல் (எ) ஏ.எஸ்.ராமலிங்கம், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

முகாமில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் டாக்டா் க.விஜயகாா்த்திகேயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com