வெள்ளக்கோவிலில் ரூ.9.43 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ.9.43 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ.9.43 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், மதுரை, திருப்பூா் மாவட்டங்களில் இருந்து 48 விவசாயிகள் தங்களுடைய 265 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 13,059 கிலோ.

வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூரில் இருந்து 7 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில் கிலோ ரூ.55.80 முதல் ரூ.93.70 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.91.35 ஆகும்.

ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.9 லட்சத்து 43 ஆயிரம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com