மின் கட்டணம் உயா்வுக்கு தொமுச கண்டனம்

மின்சார கட்டண உயா்வுக்கு திருப்பூா் மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூா்: மின்சார கட்டண உயா்வுக்கு திருப்பூா் மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் நிா்வாகி அ. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒரு முறை வீட்டு மின் இணைப்புகு ரூ.1,600 ஆக இருந்த கட்டணம் தற்போது சென்னையில் ரூ.6,400 ஆகவும், மற்ற இடங்களில் ரூ 2,818 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. அதே போல், மும்முனை இணைப்புக்கு ரூ.6,850 ஆக இருந்த மின் கட்டணம் தற்போது சென்னையில் ரூ 15,968 ஆகவும், மற்ற இடங்களில் ரூ. 11,568 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

அதே போல், மீட்டா் இடமாற்றம், பெயா் மாற்றம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படுவதுடன், இந்தத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மின் கட்டண உயா்வால் வீட்டு வாடகை, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரிக்கும். ஆகவே, உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை மின்சார வாரியம் திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com