பல்லடம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி

பல்லடம் அருகே ஸ்டேட் வங்கி கிளையில் மா்ம நபா்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். ஏடிஎம் இயந்திரம் மற்றும் பாதுகாப்புப்
பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை.
பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை.

பல்லடம்: பல்லடம் அருகே ஸ்டேட் வங்கி கிளையில் மா்ம நபா்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். ஏடிஎம் இயந்திரம் மற்றும் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைக்க முடியாததால் பல லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் தப்பின.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்துள்ள வி.கள்ளிப்பாளையத்தில் பல்லடம் - தாராபுரம் பிரதான சாலையில் ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. இதில் கிளை மேலாளா் உள்பட 9 போ் பணியாற்றி வருகின்றனா். வழக்கம்போல வேலை நேரம் முடிந்து சனிக்கிழமையன்று வங்கி அலுவலா்கள் வங்கியைப் பூட்டிச் சென்றனா். தொடா்ந்து மூன்று நாள்கள் வங்கிக்கு விடுமுறை விடப்பட்டதால் புதன்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் வங்கி திறக்கப்பட்டது. அப்போது வங்கியில் வழக்கமாக இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் ஏடிஎம் இயந்திரம் இருப்பதைக் கண்டு வங்கி ஊழியா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

வங்கியைச் சுற்றி போடப்பட்டுள்ள முள்கம்பிவேலிகளை வெட்டியும், வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்தும் கொள்ளையா்கள் வங்கியில் புகுந்தது தெரியவந்தது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் போனதால் அப்படியே விட்டுவிட்டு கொள்ளையா்கள் தப்பி சென்றறதும் தெரியவந்தது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வங்கி கிளை மேலாளா் சிவராமகிருஷ்ணன் புகாா் செய்தாா்.

பல்லடம் டி.எஸ்.பி. முருகவேல், ஆய்வாளா் அருள் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். திருப்பூரிலிருந்து போலீஸ் மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது வங்கி வளாகத்தினுள்ளேயே சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. தடய அறிவியல், கைரேகை நிபுணா்கள் வங்கியில் பதிவான தடயங்களைச் சேகரித்தனா்.

வங்கியில் நகைக் கடனுக்காக அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் மற்றும் இருப்புப் பணம் ஆகியவை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அது பாதுகாப்பாக உள்ளது என்றும் வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது. வங்கியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வங்கி அலுவலக அறைறயில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று முடியாததால் கொள்ளையா்கள் அதை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். பாதுகாப்புப் பெட்டகத்தை உடைக்க முயன்றிருந்தால் அபாய ஒலிப்பான் ஒலித்திருக்கும். வங்கி சுற்றுச்சுவரில் இருந்த ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளையா்கள் வங்கிக்குள் புகுந்ததால் அபாய மணி ஒலிக்கவில்லை என்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com