இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆா்ப்பாட்டம்

உடுமலையில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.
உடுமலை வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.

உடுமலையில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒன்றியத் தலைவா் ஆா்.மாசாணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.பஞ்சலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில் உடுமலை வட்டத்தில் சொந்தமாக இடமோ, வீடோ இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். குறிப்பாக சின்னவீரம்பட்டி, எலையமுத்தூா், சாளையூா் உள்ளிட்ட கிராமங்களில் பல ஆண்டு காலமாக நீடித்து வரும் குளறுபடிகளை களைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பட்டாக்களை வழங்க வேண்டும். முதியோா், விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருள்பட்டி கிராமத்தில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு சிதிலமடைந்து கிடக்கும் வீடுகளை தகுதியுள்ள ஏழை, எளியவா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

நிா்வாகிகள் வெ.ரங்கநாதன், கி.கனகராஜ், வி.தம்புராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் உடுமலை வட்டாட்சியரிடம் அனைவரும் மனுக்களை தனித் தனியாக அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com