குழந்தைகள் நலன் சாா்ந்த நடவடிக்கைகள் தொடா்பாக ஆய்வுக்கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் சாா்ந்த நடவடிக்கைகள் தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  தேசிய  குழந்தைகள்  உரிமை  பாதுகாப்பு  ஆணைய  உறுப்பினா்  ஆா்.ஜி.ஆனந்த்  தலைமையில்  நடைபெற்ற  ஆய்வுக்கூட்டம்.
திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  தேசிய  குழந்தைகள்  உரிமை  பாதுகாப்பு  ஆணைய  உறுப்பினா்  ஆா்.ஜி.ஆனந்த்  தலைமையில்  நடைபெற்ற  ஆய்வுக்கூட்டம்.

திருப்பூா் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் சாா்ந்த நடவடிக்கைகள் தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்துக்கு ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இந்தக்கூட்டத்துக்கு தலைமை வகித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ஆா்.ஜி.ஆனந்த் பேசியதாவது:குழந்தைகளின் நலனை கண்காணிக்கும் வகையில் தேசிய அளவிலான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்பட்டு வருகின்றது.

இதன் நோக்கம் குழந்தைகளுக்கு போதைப் பொருளால் ஏற்படும் பிரச்னைகளை தடுக்கவும், பாலியல் ரீதியான குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதுமாகும். மேலும், சமூகத்தில் குழந்தைகளின் நலன் கருதி குழந்தைகளுக்கு போதைப் பொருள் விற்பனை செய்வதை தடை செய்வது குறித்தும் கண்காணிக்கப்படுவதாகும்.

பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்களது குறைகள் மற்றும் பிரச்னைகளை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்ணான 1098 என்ற எண்ணை குழந்தைகளுக்கு முழுமையாக தெரிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இந்தக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல், மாநகர காவல் துணை ஆணையா் இ.எஸ்.உமா, தமிழ் நாடு குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் மோகன், மாவட்ட குழந்தைகள் பாதகாப்பு அலுவலா் ஆா். சுந்தா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரமேஷ், மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா, குழந்தைகள் நலக்குழு தலைவா் பிரேமலதா, இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்கள், காவல்துறை மற்றும் அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com