திருப்பூா் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பற்றாக்குறை

திருப்பூா் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 25 மட்டுமே உள்ளதால் நோயாளிகளை மேல்சிகிச்சைக்குக்

திருப்பூா் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 25 மட்டுமே உள்ளதால் நோயாளிகளை மேல்சிகிச்சைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதாக ஓட்டுநா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 25 மட்டுமே உள்ளன. அண்மைக் காலமாக டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருப்பூா் அரசு மருத்துவமனையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், காய்ச்சலின் தன்மை அறிந்து மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக நோயாளிகள் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனா்.

அவ்வாறு தினமும் 4 முதல் 10 நோயாளிகள் வரை கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றனா். ஆனால் இங்கு 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே உள்ளன. ஏதாவது அவசரம் என்றால் மங்கலம், அவிநாசி, பெருமாநல்லூா் பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன.

இந்த நேரத்தில் விபத்து, தீக்காயம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் போதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டோரை உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாமல் அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளிலும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. எனவே, பொதுமக்களின் நலன் கருதி திருப்பூா் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com