ஏ.என்.வி. மெட்ரிக். பள்ளியில் இயற்கை உணவு கருத்தரங்கம்
By DIN | Published On : 10th September 2019 11:17 AM | Last Updated : 10th September 2019 11:17 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஏஎன்வி வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் இயற்கை உணவு முறைகள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இளம் வயது மாணவர்கள் மூலம் அவர்களுடைய பெற்றோர், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் இயற்கை உணவுகள், அவற்றின் பயன்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் கருத்தரங்கு நடத்தப்பட்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இயற்கையான உணவுகள், சுகாதாரமான தயாரிப்பு, மூலிகை மருத்துவ முறைகள், சீரான வாழ்வியல் முறைகள் குறித்து இயற்கை மருத்துவர்கள் மாறன், ராணி ஆகியோர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இக்கருத்தரங்கில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.