சாமளாபுரம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ளது பெருமாமபாளையம் கிராமம். இந்தக் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அரசு மதுபானக் கடை வியாழக்கிழமை 
திறக்கப்பட்டது. 
இதை அறிந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மாலை 6 மணி அளவில் மதுக்கடை  முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த மங்கலம் போலீஸார், டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தினர். எனினும், மதுக்கடையை  மூடினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து,பொதுமக்கள் அனைவரும்  கலைந்து சென்றனர்.  மதுக்கடை மூடாவிடில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில்  ஈடுபட உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com