தனியார் நிறுவன ஊழியர் கொலை: 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை

திருப்பூரில் தனியார் நிறுவன ஊழியரைக் கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

திருப்பூரில் தனியார் நிறுவன ஊழியரைக் கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
திருப்பூர், கொங்கு பிரதான சாலை பகுதியில் வசித்து வந்தவர் எஸ்.ராமசந்திரன் (24). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர் கொங்கு பிரதான சாலை முதலாவது ரயில்வே கேட் அருகே 2005 மே 9 ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராமசந்திரனைக் கத்தியால் குத்தி, அவரிடமிருந்த ரூ.5 ஆயிரம் பணத்தைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.
 இதில் பலத்த காயமடைந்த ராமசந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
 விசாரணையில், ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரத்தைச் சேர்ந்த டி.சரவணன் (21), பழனி, ஆயக்குடியைச் சேர்ந்த கார்த்திக் (20) ஆகியோர் ராமசந்திரனைக் கொலை செய்தது தெரியவந்தது. இந்த இருவரும் திருப்பூரில் உள்ள சாய ஆலையில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி எஸ்.அல்லி வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார். 
இதில், கொலை வழக்கில் டி.சரவணன், கார்த்திக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், வழிப்பறிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் கே.என்.சுப்பிரமணியம் ஆஜரானார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com