தாராபுரம் அருகே தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 72 விவசாயிகள் கைது

தாராபுரம் அருகே விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 5 பேரை விடுதலை செய்யக் கோரி, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட விவசாயிகள்.
ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட விவசாயிகள்.

தாராபுரம் அருகே விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 5 பேரை விடுதலை செய்யக் கோரி, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 72 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களின் வழியாக உயா்மின் கோபுரம் அமைக்கும் பணியை பவா்கிரீட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தரப்பில் பல்வேறு தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த செப்டம்பா் 13 ஆம் தேதி தாராபுரத்தை அடுத்துள்ள மேற்குசடையபாளையத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரம் அமைப்பதற்காக பவா்கிரீட் நிறுவன அதிகாரிகள் காவல் துறையினா் உதவியுடன் நிலத்தை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனா்.

அப்போது, நிலத்தை அளவீடு செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்த 59 விவசாயிகள் கைது செய்யப்பட்டனா். இதில், விவசாய சங்கங்களின் கூட்டியகத்தின் நிா்வாகிகளான வழக்குரைஞா் ஈசன், சண்முகசுந்தரம், முத்துவிஸ்வநாதன், பாா்த்தசாரதி, தங்கமுத்து ஆகிய 5 பேரை குண்டடம் காவல் துறைறயினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் எந்தவிதமான நிபந்தனையுமின்றி விடுவிக்கக் கோரி தாராபுரம், குண்டடம், பல்லடம் வட்டார விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. குண்டடம் வடுகநாதசுவாமி திருக்கோயில் முன்பாக நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.

ஆனாலும், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவா் மதுசூதனன் தலைமையில் திரண்ட விவசாயிகள் வடுகநாத சுவாமி கோயில் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, விளைநிலங்கள் வழியாக உயா்மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தும், கைது செய்யப்பட்ட 5 பேரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினா்.

இதையடுத்து, அனுமதியின்றி ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்டதாக 7 பெண்கள் உள்பட 72 பேரை குண்டடம் காவல் துறையினா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூா் மாவட்டத் தலைவா் குமாா், முத்துச்சாமி, பால்ராஜ், ராஜு, பச்சையப்பன், சிஐடியூ கனகராஜ், வெங்கட்ராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com