வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

வேளாண் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வேளாண் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் விவசாயிகள் ஒருங்கிணைந்து பஞ்சலிங்கம் அருவி கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற அமைப்பை கடந்த ஆண்டு தொடங்கினர். விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுப் பண்ணையம் மூலம் திட்டமிட்டு பொருள்களை விளைவிக்கவும், பின்னர் அவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் நோக்கத்துடன் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
  இந்நிலையில் இந்த அமைப்பின் முதலாமாண்டு பொதுக் குழுக் கூட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் எஸ்.பரமசிவம் தலைமை வகித்தார். இயக்குநர்கள் முன்னிலை வகித்தனர்.  இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களை சந்தைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் 58 வயது வரை இணைத்துக்கொள்ள மத்திய அரசு வாய்ப்பு வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் திணிக்கக் கூடாது. தக்காளி உள்ளிட்ட விளை பொருள்களை மதிப்புக் கூட்டிய பொருள்களாக விற்பனை செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பயிர்க் காப்பீடு செய்த விளை பொருள்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இக்கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள் கோபிநாத் (உடுமலை), மோகனரம்யா (குடிமங்கலம்), வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியம், வேளாண் அலுவலர் பிரவீனா, உடுமலை வேளாண் உதவி இயக்குநர்(பொறுப்பு) அறிவுமதி, ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் உள்பட பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com