பொங்காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவங்கியது

பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா யாக வேள்வியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா யாக வேள்வியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
  பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழாக் குழு சார்பில் யாக வேள்வியுடன் கொலு, அபிஷேக பூஜை, 108 அர்ச்சனை, தீபாராதனை ஆகியவை  நடைபெற்றன. விழாவிற்கு ராஜ்செட்டியார் தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கித் தலைவர்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூர்த்தி, நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சூ.தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாக் குழு செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். நவராத்திரி விழாவை பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர்கரைப்புதூர் ஏ.நடராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். 30ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தினந்தோறும் மாலை 6 மணிக்கு  ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறவுள்ளது. இதனை கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கிவைக்கிறார். 
  அதைத் தொடர்ந்து  அக்டோபர் 1ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) அம்பிகையே என்னும் தலைப்பில் வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன், 2ஆம் தேதி நவராத்தி நாயகி என்னும் தலைப்பில் மதுரகாளியம்மன் கோயில் சத்யா சுவாமிகள், 3ஆம் தேதி நவராத்திரி சரஸ்வதி என்னும் தலைப்பில் ஆறுமுகம், 4ஆம் தேதி சக்தி வழிபாடு என்னும் தலைப்பில் ஆடிட்டர் நடராஜ், 5ஆம் தேதி சத்ய சாய் சொற்பொழிவு, 6ஆம் தேதி நவகாளி என்னும் தலைப்பில் திருப்பூர் சாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி மங்கையர்கரசி, 7ஆம் தேதி அம்பிகையைக் கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் கவிஞர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசுகின்றனர். 8ஆம் தேதி நவராத்திரி நிறைவு அம்பு சேர்வை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், பக்தர்கள் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com