வெள்ளக்கோவில் அருகே தூய்மைப் பணியாளர்களே அசுத்தப்படுத்தும் அவலம்

வெள்ளக்கோவில் அருகே தூய்மைப் பணியாளர்களே சுகாதாக் கேட்டை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. 
வெள்ளக்கோவில் அருகே தூய்மைப் பணியாளர்களே அசுத்தப்படுத்தும் அவலம்

வெள்ளக்கோவில் அருகே தூய்மைப் பணியாளர்களே சுகாதாக் கேட்டை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பச்சாபாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் பேப்பர் அட்டைக் கம்பெனி, கான்கிரீட் ரெடிமேட் கட்டடம் உருவாக்கும் நிறுவனம், கருங்கல் கிரஷர்கள், நூல் மில்கள் உள்ளன. கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஓலப்பாளையம் கடைவீதிப் பகுதியும் இந்த ஊராட்சியில் உள்ளது. 

இரவு நேரத்தில் வெளியூரில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து பல்வேறு கழிவுகளை ஓலப்பாளையத்தில் கொட்டிச் சென்று விடுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. இது போன்றவற்றை எடுத்துச் சென்று முறையாக அப்புறப்படுத்த கஷ்டப்பட்டு, கண்ட கழிவுகளுடன் வீடுகள், வியாபார நிறுவனங்களில் கொட்டப்படும் குப்பைகளையும் சேர்த்து தூய்மைப் பணியாளர்களே தீ வைத்து எரிக்கிறார்கள். 

இதனால் சுகாதாக் கேட்டுடன் நச்சுப் புகை வெளியேறி, காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க ஊராட்சித் தலைவர் வரதராஜன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com