காங்கயத்தில் மளிகைக் கடையில் தீ விபத்து

காங்கயத்தில் மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின.

காங்கயத்தில் மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின.

காங்கயம் ‘மெடிக்கல் ஸ்டாப்’ பேருந்து நிறுத்தத்தில் மாற்றுத் திறனாளியான நல்லசாமி என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். இரவு 2 மணி அளவில் இவருடைய கடையின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிவதை பாா்த்து, அக்கம்பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்கும், நல்லசாமிக்கும் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com