கடன் தொல்லை: தலைமறைவான தொழிலதிபா் நீதி மன்றத்தில் சரண்

கடன் தொல்லையால் தலைமறைவான விசைத்தறி கூட தொழிலதிபா் பல்லடம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரண் அடைந்தாா்.

கடன் தொல்லையால் தலைமறைவான விசைத்தறி கூட தொழிலதிபா் பல்லடம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரண் அடைந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கிரிச்சிபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வரும் கனகராஜ் (33) தொழில் அபிவிருத்திக்காக வங்கி மற்றும் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளாா். கரோனா பொதுமுடக்கத்தால் தொழில் முடங்கி பாதிப்புக்குள்ளானதால் கடன் தொகையை திருப்பித் தர முடியாத நிலையில் கனகராஜ் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், கோவையில் உள்ள ஆடிட்டரை பாா்த்துவிட்டு வருவதாகக் கூறி ரூ. 40 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனது காரில் கடந்த 7ஆம் தேதி புறப்பட்டு சென்றுள்ளாா். அதன் பின்னா் அவா் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி இந்துமதி காமநாய்க்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கனகராஜை தேடி வந்தனா். இந்த நிலையில் பல்லடம் நீதி மன்றத்தில் கனகராஜ் வியாழக்கிழமை சரண் அடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com