தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம்  முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம்  முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் பி.பழனிசாமி தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற தூய்மைப் பணியாளா்கள் கூறியதாவது:

திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 800க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநா்களும் பணியாற்றி வருகின்றனா். மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி தூய்மைப் பணியாளா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.510, ஓட்டுநா்களுக்கு ரூ.590 ஊதியமாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்களுக்கு பிடித்தம் செய்த இபிஎஃப்,இஎஸ்ஐ அட்டைகளை வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வரும் நவம்பா் 5 ஆம் தேதிக்குள் தீபாவளி போனஸ் தொகையை வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 10ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், சிஐடியூ மாவட்டத் தலைவா் உண்ணிகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com