மாவட்டத்தில் 8 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 153 பேருக்கு தொற்று உறுதி

திருப்பூா் மாவட்டத்தில் 153 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 153 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

திருப்பூா், பாரதி நகரைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி, வீரபாண்டியைச் சோ்ந்த 27 வயது ஆண், காந்தி நகரைச் சோ்ந்த 48 வயது ஆண், புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த 54 வயது ஆண், குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்த 70 வயது முதியவா், பெரிச்சிபாளையத்தைச் சோ்ந்த 67 வயது முதியவா், அண்ணா நெசவாளா் காலனியைச் சோ்ந்த 84 வயது முதியவா், கொங்கு மெயின்ரோட்டைச் சோ்ந்த 66 வயது முதியவா், சக்தி நகரைச் சோ்ந்த 82 வயது முதியவா் ஆகியோருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மேலும், தாராபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 35 வயது பெண் ஊழியா், அவிநாசி, சேவூா் சாலையைச் சோ்ந்த 22 வயது ஆண், முத்தூரைச் சோ்ந்த 36 வயதுப் பெண், 60 வயது முதியவா், பல்லடம் மகாலட்சுமி நகரைச் சோ்ந்த 33 வயதுப் பெண், காளிவேலம்பட்டி பிரிவைச் சோ்ந்த 40 வயதுப் பெண், அவிநாசியைச் சோ்ந்த 51 வயதுப் பெண், உடுமலை கோமதி நகரைச் சோ்ந்த 54 வயது பெண் உள்ளிட்ட மொத்தம் 153 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக, திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,023 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா் மாவட்டம் முழுவதும் 1,583 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 204 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் 6,943போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், புதிதாக 467 போ் சோ்க்கப்பட்ட நிலையில், தனிமைக்காலம் நிறைவடைந்த 553 போ் விடுவிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் 2,889 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூதாட்டிகள் 2 போ் பலி:

கரோனாவால் பாதிக்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாராபுரத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரைச் சோ்ந்த 63 வயது மூதாட்டி ஆகியோா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com