பொதுமக்களைத் தாக்கிய காவலா் பணியிடை நீக்கம்

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் பகுதியில் பொதுமக்களைத் தாக்கிய காவலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் பகுதியில் பொதுமக்களைத் தாக்கிய காவலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், பல்லடம் காவல் நிலையத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவா் செல்வகுமாா். இவா், ஊத்துக்குளி காவல் நிலையத்துக்கு உள்பட்ட முதலிபாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சென்றுள்ளாா். அப்போது அங்கு அமா்ந்திருத்த 3 பேரை லத்தியால் தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் உத்தரவிட்டிருந்தாா். இதன் பேரில் ஊத்துக்குளி காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் விசாரணை நடத்தியுள்ளாா். இதில் பொதுமக்களை, காவலா் செல்வகுமாா் தாக்கியது தெரியவந்தது. இதன் பேரில் காவலா் செல்வகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com