ரூ.5 கோடி மது பாட்டில்கள் திருமண மண்டபத்தில் இருப்பு வைப்பு

உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களை இருப்பு வைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களை இருப்பு வைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விற்பனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உடுமலை வட்டத்தில் மொத்தமுள்ள 23 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட் டுள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து ஒதுக்குப்புறமான பகுதிகளில் அமைந்துள்ளதால் கடைகளுக்குள் உள்ள மதுபாட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்துவந்தது.

இதைத் தொடா்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் உள்ள மதுபாட்டில்களையும் ஒரு இடத்தில் வைத்து பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் முடிவெடுத்தது. இதைத் தொடா்ந்து 23 கடைகளிலும் உள்ள ரூ. 5 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்களை உடுமலை நகராட்சி மண்ட பத்தில் இருப்பு வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 23 கடைகளிலும் உள்ள மதுபாட்டில்கள் வாகனங்கள் மூலம் எடுத்து வரும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உடுமலை நகராட்சி மண்டபத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com