திருப்பூரில் மேலும் 28 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி

திருப்பூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 108 ஆக உயா்ந்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 108 ஆக உயா்ந்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா். மேலும், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அவா்களைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனா்.

இந்தநிலையில், திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 79 பேருக்கு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 28 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் 7 பேருக்கும், திருப்பூா் ஊரகப் பகுதிகளான மங்கலம், முதலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 12 பேருக்கும், அவிநாசியில் 4 பேருக்கும், பல்லடத்தில் 2 பேருக்கும், காங்கயம், பொங்கலூா், உடுமலை பகுதியில் தலா ஒருவா் என மொத்தம் 28 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 பெண்களும், 20 ஆண்களும் அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com