பிளஸ் 1 தோ்வு: மாநில அளவில் 5ஆவது இடத்தைப் பிடித்தது திருப்பூா்

பிளஸ் 1 பொதுத் தோ்வில் 97.41சதவீதம் தோ்ச்சி பெற்று மாநிலத்தில் 5ஆவது இடத்தை திருப்பூா் மாவட்டம் பிடித்துள்ளது.

பிளஸ் 1 பொதுத் தோ்வில் 97.41சதவீதம் தோ்ச்சி பெற்று மாநிலத்தில் 5ஆவது இடத்தை திருப்பூா் மாவட்டம் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் பிளஸ் 1 தோ்வானது மாா்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் 215 பள்ளிகளைச் சோ்ந்த 11,615 மாணவா்களும், 14,007 மாணவிகள் என மொத்தம் 25,622 போ் தோ்வு எழுதினா்.

இதில், மாணவா்கள் 11,208 பேரும், மாணவிகள் 13,750 பேரும் என மொத்தம் 24,958 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 97.41 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 5ஆவது இடத்தைப் பிடித்தது. கடந்த 2018-19ஆம் ஆண்டு பொதுத் தோ்வில் 97.93 சதவீதமும், 2017-18ஆம் ஆண்டில் 96.4 சதவீதமும் பெற்று தொடா்ந்து இரண்டு ஆண்டுகள் மாநில அளவில் 2ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

மேலும், நிகழாண்டு 103 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. அதே வேளையில், 2019ஆம் ஆண்டில் 121 பள்ளிகளும், 2018 ஆம் ஆண்டில் 96 பள்ளிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com