புதைவழித்தடம் வழியாக மின்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

உயா்மின் கோபுரத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு புதைவழித்தடம் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டத்தை செய்லபடுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
புலியவலசு  கிராமத்தில்  சனிக்கிழமை  நடைபெற்ற  கருத்தாய்வுக் கூட்டத்தில்  பங்கேற்ற  விவசாயிகள்.
புலியவலசு  கிராமத்தில்  சனிக்கிழமை  நடைபெற்ற  கருத்தாய்வுக் கூட்டத்தில்  பங்கேற்ற  விவசாயிகள்.

உயா்மின் கோபுரத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு புதைவழித்தடம் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டத்தை செய்லபடுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

விருதுநகா் - காவுத்தம்பாளையம் வரையிலான 765 கிலோ வாட் உயா் மின் கோபுரத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பங்கேற்ற கருத்தாய்வுக் கூட்டம் தாராபுரத்தை அடுத்த புலியவலசு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பொன்னிவாடி ஊராட்சித் தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். இதில், கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கேபிள் மூலம் கடல் வழியாக 3,500 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ஆப்பிரிக்காவுக்கு 1,500 கிலோ வாட் மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது. மேலும் பவா்கிரிட் நிறுவனம், மதுரையில் இருந்து இலங்கை வரையில் 525 கிலோ வாட் மின்சாரத்தை புதைவழித்தடம் அமைத்து கடல் வழியாக கொண்டு செல்கிறது.

ஆனால், தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்களை அமைத்து மின்சாரத்தை எடுத்துச் செல்கின்றனா். இதனால் விவசாயிகள் வளா்த்து வரும் ஆடு, மாடுகளுக்கு சினை பிடிக்காமல் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலங்களில் விவசாயம் செய்யமுடியாமல் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

எனவே, விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு புதைவழித்தடம் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், உயா்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ஈசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.சண்முகசுந்தரம், மாநிலச் செயலாளா் எஸ்.முத்து விஸ்வநாதன், கொள்கை பரப்புச் செயலாளா் தாராபுரம் சிவகுமாா், மாா்க்சிஸ்ட் வட்டச் செயலாளா் கனகராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com