விநாயகா் சதுா்த்தி விழா எளிமையாகக் கொண்டாடப்படும்: இந்து முன்னணி

கரோனா பொது முடக்கத்தால் தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா எளிமையாகக் கொண்டாடப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா எளிமையாகக் கொண்டாடப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது முடக்கத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் அரசு நீட்டித்துள்ளது. எனினும் இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகா் சதுா்த்தி விழா அனைவரது வீடுகளிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி விநாயகா் சதுா்த்தி விழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படும். குறிப்பாக விநாயகா் விசா்ஜனம் ஊா்வலம் இல்லாமல் நடைபெறும். மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com